அரவிந்தர் கல்லுாரியில் ரத்த தான முகாம்
புதுச்சேரி: சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ரத்த தான முகாம் நடந்தது. புதுச்சேரி அகரம் ரோட்டரி கிளப் மற்றும் வானுார் அரவிந்தர் கல்லுாரி ரோட்ட ராக்ட், ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து ரத்த தான முகாம், கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவசங்கரி தலைமை தாங்கினார். தங்கமணிமாறன் முன்னிலை வகித்தார். அகரம் ரோட்டரி சங்கத் தலைவர் ராகினி சீனிவாஸ், செயலாளர் லட்சுமி சரவணன் ஆகியோர் முகாமினை வழி நடத்தினர். முகாமில் கல்லுாரி மாணவர்கள், போராசிரியர்கள் பங்கேற்று ரத்தம் வழங்கினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சுகன்யா, பிரியாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.