உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாகூர் அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

தாகூர் அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

புதுச்சேரி: தாகூர் அரசு கலை,அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ரத்த தான முகாம் நேற்று நடந்தது.புதுச்சேரி, தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், 7 நாள் சிறப்பு முகாம் தொண்டமாநத்தத்தில் கடந்த27ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது.அதன் ஒருபகுதியாக, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் ரத்த தான முகாம் நேற்று நடந்தது.முகாமை கல்லுாரி முதல்வர் கருப்பசாமி துவங்கி வைத்தார்.முகாமில், ஜிப்மர் டாக்டர்பிரஷியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் 200க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து ரத்த தானம் பெற்றனர்.ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வெங்கட்டசாமி, ஜென்னி, தேசிய மாணவர் படை தீபக்,செந்நாடா சங்க ஒருங்கிணைப்பாளர் ஹெப்சிபா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை