மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவியப்போட்டி மாணவர்களுக்கு பரிசு
24-Sep-2025
புதுச்சேரி; ஜிப்மர் ரத்த மாற்று மருத்துத்துறை மற்றும் பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை சார்பில் ஓவியப்போட்டி நடந்தது. தேசிய தன்னார்வ ரத்த தான மாத விழாவை, முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், பல உயிர்களை காப்போம் என்ற தலைப்பில், ஓவியப்போட்டி ஜிப்மரில் நடந்தது. நடுவர்களாக ஜிப்மர் குழந்தைகள் மருத்துவத்துறை பேராசிரியர் ரீனா குலாதி, ஓவியக்கலைஞர் சுந்தரம்பாள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேராசிரியர் அபிேஷக், பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், டாக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Sep-2025