மேலும் செய்திகள்
படகு சவாரி தற்காலிக நிறுத்தம்
12-Dec-2024
பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்
14-Nov-2024
அரியாங்குப்பம்,: நோணாங்குப்பம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதை அடுத்து, படகு குழாமில் படகு சவாரி நிறுத்தப் பட்டது.தொடர் மழையால், வீடுர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த 2ம் தேதி, நோணாங்குப்பம் ஆற்றில், வெள்ளப் பெருக்கெடுத்து, கரைபுரண்டு ஓடியது. அதில், படகு குழாமில் நிறுத்தி வைத்திருந்த 5 படகுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அதில், ஒரு படகு மட்டும், மரக்காணம் அருகே கரை ஒதுக்கியது. மற்ற 4 படகுகள் மாயமானது.ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், பாரடைஸ் பீச்சில் இருந்த ஜெட்டி, குடில்கள், கீற்று குடைகள் அடித்து செல்லப்பட்டது. சேதமடைந்த, ஜெட்டி உள்ளிட்ட இடங்களை, படகு குழாம் ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாரடைஸ் பீச்சுக்கு செல்ல முடியாமல் நிலை இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகளுக்காக, படகு சவாரி மட்டும் இயங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், வீடுர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதையடுத்து, நோணாங்குப்பம் ஆற்றில், நேற்று, நீர் வரத்து அதிகரித்ததால் படகு குழாமில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. அதனால், வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.சீரமைக்கும் பணி நடந்து வருவதால், நிறுத்தப்பட்ட படகு சவாரி, இரண்டு நாட்களுக்கு பின்னர், பாரடைஸ் பீச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என படகு குழாம் மேலாளர் தெரிவித்துள்ளார்.
12-Dec-2024
14-Nov-2024