உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

அரியாங்குப்பம் : புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, வீராம்பட்டினம், நல்லவாடு கடற்கரை பகுதியில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை அறிவித்ததை அடுத்து, நல்லவாடு, மீனவர் பகுதியை கலெக்டர் குலோத்துங்கன் அதிகாரிகளுடன் பார்வையிட்டார். கடற்கரை பகுதியில், நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அதையடுத்து, வீராம்பட்டினம், நல்லவாடு கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த படகுகளை, டிராக்டர் மூலம் இழுத்து வந்து, பாதுகாப்பான இடத்தில், மீனவர்கள் நிறுத்தியுள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்து வரும் நிலையில், மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை