மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
30-Nov-2024
பாகூர் : பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் கரை ஒதுங்கிய சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்று படுகையில்,50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற பாகூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் துணையுடன் உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது குறித்து வி.ஏ.ஓ., ரகு அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Nov-2024