உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுால்கள் வெளியீட்டு விழா

நுால்கள் வெளியீட்டு விழா

புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரி தமிழ் பேராசிரியர் வஜ்ரவேலு எழுதிய பன்மொழி ஒப்பாய்வுக் களங்கள், ஒப்பீட்டு நோக்கில் தமிழ், தெலுங்கு, தலித் கதைகள் என்ற நுால்கள் வெளியீட்டு விழா நடந்தது. புதுவை தமிழ்சங்கத்தில் நடந்த விழாவில் பேராசிரியர் மணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் பேராசிரியர் பஞ்சாங்கம் நுாலை வெளியிட, பேராசிரியர் கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டார். கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் சேதுபதி நுால் மதிப்புரையாற்றினார். மற்றொரு நுாலை, திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் மனுவேல் வெளியிட, தாகூர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் ரேவதி பெற்றுக் கொண்டார். புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் ரவிக்குமார் நுால் மதிப்புரையாற்றினார். கல்லுாரி முன்னாள் முதல்வர்கள் இளங்கோ, சுப்ரமணி வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் வஜ்ரவேலு ஏற்புரையாற்றினார். பேராசிரியர் சந்திரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை