புத்தகம் வெளியீட்டு விழா
புதுச்சேரி: புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரி கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் துறை சார்பில், பி.காம்., 4ம் பருவ மாணவர்கள் எழுதிய கம்யூனிட்டி எங்கேஜ்மென்ட் என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் துறை தலைவர் அனுராதா தலைமை தாங்கினார். துறை பேராசிரியர்கள் சிலம்பரசன், ராதிகா, கவுரி, ஜெயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆரம்ப குயில் பதிப்பகத்தின் தலைமையாசிரியர் சுகன்யா பங்கேற்று, புத்தகத்தை வெளியிட்டார். சமுதாய ஈடுபாடு பாடத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் நல்லவாடு மற்றும் பாகூர் பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அப்பகுதி மக்களை சந்தித்து நிதி கல்வியறிவு, வங்கி சார்ந்த விஷயங்கள், துாய்மை மற்றும் சுகாதார விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சேமிப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மக்களின் நிஜ வாழ்க்கைப் பிரச்னைகளை கேட்டறிந்து, அவற்றை ஆவணப்படுத்திய அனுபவங்களே இப்புத்தகமாக வெளிவந்துள்ளது. விழாவில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.