உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புத்தக சேவை செம்மல் விருது வழங்கும் விழா

 புத்தக சேவை செம்மல் விருது வழங்கும் விழா

புதுச்சேரி: புதுச்சேரி எழுத்தாளர் புத்தகம் சங்கங்கள் சார்பில் புத்தக சேவை செம்மல் விருது வழங்கும் விழா வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடந்தது. புதுச்சேரி எழுத்தாளர் புத்தகம் சங்கங்கள் சார்பில் 29வது தேசிய புத்தக கண்காட்சி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் துவங்கி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புத்தக கண்காட்சியில் புத்தக சேவை செம்மல் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, புத்தக சங்கம் செயலர் முருகையன் வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம் வரவேற்றார். விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், புதுச்சேரி பல்கலைக்கழகம் பேராசிரியர்கள் திருநாகலிங்கம், கருணாநிதி, தனியார் சுயநிதி பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், திரைப்பட ஒளிப்பதிவாளர் அருண் மொழிசோழன் ஆகியோருக்கு புத்தக சேவை செம்மல் விருதினை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கண்காட்சி நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை