உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருட்டு; சிறுவன் கைது

பைக் திருட்டு; சிறுவன் கைது

அரியாங்குப்பம்; பைக் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த சிறுவனை, போலீசார் கைது செய்தனர். தவளக்குப்பம், ஆரோவில் பகுதியில் பைக் திருட்டு வழக்கில், ஆரோவில் அடுத்த இடையஞ்சாவடியை சேர்ந்த நரேஷ், 19; என்பவரை, கடந்த 30ம் தேதி, தவளக்குப்பம் போலீசார் கைது செய்து, 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுவனை, நேற்று திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே நின்ற போது போலீசார் கைது செய்தனர். பின் சிறுவனை, அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !