உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாடு மோதி வாலிபர் சாவு

மாடு மோதி வாலிபர் சாவு

காரைக்கால்: காரைக்காலில் மாடு மோதி காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காரைக்கால், கோட்டுச்சேரி, கீழக்காசாகுடி லட்சுமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 37. இவர் ஒ.என்.ஜி.சி., கேண்டியன் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்தார்.கடந்த 13ம் தேதி மணிகண்டன் இரவு பைக்கில் கீழக்காசாக்குடி சாலை வழியாக வீட்டுக்கு சென்றபோது மழை பெய்தது. அப்போது சாலையின் குறுக்கே ஓடிய மாடு மோதியதில், மணிகண்டன் காயமடைந்தார். தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை