மேலும் செய்திகள்
ஆபத்தை உணராமல் ஏரியில்மீன் பிடிக்கும் இளைஞர்கள்
20-Feb-2025
புதுச்சேரி : வேல்ராம்பட்டு ஏரியில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தார்.முதலியார்பேட்டை, வேல்ராம்பேட் பாண்டியன் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமரன், 39; தச்சுத்தொழிலாளி. இவரது மகன் லத்தீஸ்வர், 13, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார்.லத்தீஸ்வருக்கு நேற்றுடன் தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால், மதியம் அவரது நண்பர்கள் 5 பேருடன் வீட்டின் அருகே உள்ள வேல்ராம்பட்டு ஏரிக்கு சென்றார். இதில் லத்தீஸ்வர், அரவது நண்பர் சரண் 10, ஆகியோர் ஏரியில் தவறி விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஏரியில் விழுந்த 2 சிறுவர்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, லத்தீஸ்வர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சரண் ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Feb-2025