உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடல் அலையில் சிக்கிய சிறுவன் மீட்பு

கடல் அலையில் சிக்கிய சிறுவன் மீட்பு

புதுச்சேரி: பேரடைஸ் கடற்கரை அலையில் சிக்கிய சிறுவன் மீட்கப்பட்டார்.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ்குமார். புத்தாண்டு கொண்டாட தனது குடும்பத்தினருடன் புதுச்சேரி வந்தார். நேற்று முன்தினம் நோணாங்குப்பத்தில் இருந்து படகு மூலம் பேரடைஸ் கடற்கரை சென்றனர்.முகேஷ்குமார் குடும்பத்தினர் கடலில் விளையாடினர். அப்போது எழுந்த ராட்சத அலையில் முகேஷ்குமாரின் மகன் விவன், 15; சிக்கினார். முகேஷ்குமார் குடும்பத்தினர் கூச்சலிட்டனர். படகு குழாம் பாதுகாப்பு ஊழியர்கள் கடலில் குதித்து சிறுவனை மீட்டனர். ஸ்பீடு படகு மூலம் சிறுவனை நோணாங்குப்பம் படகு குழாமிற்கு கொண்டு வந்தனர். அங்கு தயாராக இருந்த ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். சிறுவனக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி