உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காதலியை மிரட்டிய காதலன் கைது

 காதலியை மிரட்டிய காதலன் கைது

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை சேர்ந்தவர் நிஷாந்த், 24; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும், கல்லுாரியில் படித்தபோது பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர். இந்நிலையில் நிஷாந்த், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் நெருக்கமாக பழகி வந்தார். பின், நிஷாந்த், அப்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் நிஷாந்த் வேறொரு பெண்ணை காதலித்து வருவது அப்பெண்ணிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிஷாந்திடம் வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுத்ததால், அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நிஷாந்த், தொடர்ந்து பிரச்னை செய்தால், நாம் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என, மிரட்டினார். இது குறித்து அப்பெண் அ ளித்த பு காரின் பேரில், லா ஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, நிஷாந்தை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இந்நிலையில், புகார் அளித்த பெண்ணும் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ