மேலும் செய்திகள்
பி.பி.எல்., கிரிக்கெட் போட்டி மாகி அணி வெற்றி
17-Jul-2025
வில்லியனுார் : பி.பி.எல்., கிரிக்கெட் இறுதி போட்டியில், வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணியும், மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதுகின்றன. ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்து, முதல் தகுதிச்சுற்று போட்டியில் வில்லியனுார் மோகித் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று மாலை நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ், ஜெனித் ஏனாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஜெனித் ஏனாம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 203 ரன்கள் மட்டும் எடுத்தது. 9 ரன்கள் வித்தியாசத்தில் மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. நாளை (27ம் தேதி) மாலை நடக்கும் இறுதி போட்டியில் வில்லியனுார் மொகித் கிங்ஸ் அணியும், மாகி மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோது கின்றன. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம், தோல்வியடையும் அணி ரன்னர் பட்டம் பெறும். சென்ற முறை நடந்த இறுதி போட்டியில் இந்த இரு அணிகளும் மோதியது. அதில் மாகி மெகலோ அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
17-Jul-2025