உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிரம்மோற்சவ விழா 23ம் தேதி துவக்கம்

 பிரம்மோற்சவ விழா 23ம் தேதி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில், பிரம்மோற்சவ விழா, வரும் 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவையொட்டி, வரும் 18ம் தேதி காலை 7:00 மணிக்கு பந்த கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 23ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 31ம் தேதி, காலை 8:00 மணிக்கு ரத உற்சவம், மாலை 6:00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 1ம் தேதி, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 8ம் தேதி, கூழ் உற்சவம் மற்றும் பள்ளயம் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி