பீ வெல் மருத்துவமனையில் மார்பக நோய் கண்டறியும் முகாம்
புதுச்சேரி: பி வெல் மருத்துவமனை சார்பில் இலவச மார்பக நோய் கண்டறியும் இரண்டு நாள் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. புதுச்சேரி, லாஸ்பேட்டை, இ.சி.ஆர். கிரீன் கார்டன்ஸ், எண்: 15ல் அமைந்துள்ள பி வெல் மருத்துவமனையில் இலவச மார்பக நோய் கண்டறியும் சிறப்பு முகாம் இன்று (30ம் தேதி) மற்றும் நாளை (31ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் சிறப்பு முகாமில், சிறப்பு கதிர்வீச்சு மற்றும் மருந்தியல் சிகிச்சை வல்லுநரும், புற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணருமான திவ்யா பாரதி கலந்து கொண்டு, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகிறார். சிறப்பு முகாமில் 35 வயத்திற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் கலந்து கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளலாம். ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு வலியில்லா டிஜிட்டல் மெம்மோகிராம் ஸ்கேன் பரிசோதனை முதல் 70 பெண்களுக்கு முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. முன்பதிவிற்கு, 73732 02111, 96983 00300 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.