மேலும் செய்திகள்
எஸ்.ஆர்.கே பள்ளி ஆண்டு விழா
06-May-2025
புதுச்சேரி: புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் உள்ள பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் 481, இரண்டாம் மதிப்பெண் 447, மூன்றாம் மதிப்பெண் 430, மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் புவனா வாசுதேவன் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார்.அவர் கூறுகையில், 'சராசரி மாணவர்கள், படிப்பில் ஈடுபாடு இல்லாத மாணவர்கள் மீதும் தனி கவனம் செலுத்தி ஊக்கப்படுத்தி அவர்களை கல்வியிலும் வாழ்விலும் மேம்பட வைக்கிறோம்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சர்வதேச கல்விமுறையுடன் தொழில் முனைவோர் கல்வி அளிக்கப்படுகிறது. வேலை வாய்ப்பு மற்றும் வகுப்பறை தாண்டிய கற்றல் திறன் வளர் கல்வி எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வெற்றிகரமான முன்னேற்ற கல்வியுடன் தக்க சான்றிதழ் வழங்கப்படுகிறது.அனைத்து மாணவர்களையும் படிப்பில் ஆர்வத்தை துாண்டி அவர்களை வாழ்வில் முன்னேற வைப்பதே எங்கள் பள்ளியின் நோக்கமாகும். இந்த வெற்றிக்கு பாடுபட்ட பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்' என்றார்.
06-May-2025