உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செக்யூட்டியை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு

செக்யூட்டியை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு

வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த மேல் திருக்காஞ்சியை சேர்ந்தவர் சிவக்குமார், 52; உறுவையாறு சாலை மங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனி செக்யூரிட்டி. நேற்று முன்தினம் மாலை மங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன்கள் சுகுமார், 32; சுசிபாலன், 29, ஆகியோர் கம்பெனிக்கு சென்று தகராறில், ஈடுபட்டனர். அதனை தட்டிக்கேட்ட செக்யூரிட்டி சிவக்குமாரை ஆபாசமாக திட்டி, செங்கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த சிவக்குமார் புதுச்சேரி அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில், சுகுமார் உள்ளிட்ட இருவர் மீது மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை