உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., பஸ்கள் நிறுத்தம்

பி.ஆர்.டி.சி., பஸ்கள் நிறுத்தம்

புதுச்சேரி : புயல் கன மழை காரணமாக சென்னை, காரைக்கால் செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ்கள் நிறுத்தப்பட்டன.புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் சென்னை, காரைக்கால், பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புயல் காரணமாக நேற்று காலை முதல் கன மழை பெய்தது. இதனால் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் 14 பி.ஆர்.டி.சி., பஸ்களில் 4 மட்டுமே இயக்கப்பட்டது.காரைக்காலுக்கு இயக்கப்படும் 9 பஸ்களில் 1 மட்டுமே இயங்கியது. லோக்கலில் இயங்கும் டவுன் பஸ்களும் 20 சதவீதம் மட்டுமே இயங்கியது. மற்றும் அனைத்து பஸ்களும் இயக்கப்படாமல் டெப்போவில் நிறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ