உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.எஸ்சி., நர்சிங் படிப்பு மெரிட் லிஸ்ட் வெளியீடு

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு மெரிட் லிஸ்ட் வெளியீடு

புதுச்சேரி: பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, நடந்த நுழைவுத் தேர்வின், மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கு, சுகாதாரத்துறை சார்பில் நுழைவு தேர்வு கடந்த 29ம் தேதி நடந்தது.புதுச்சேரி பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என, 9 மையங்களில் நடந்த நுழைவு தேர்வை, ஆயிரத்து 876 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.நுழைவு தேர்வுக்கான ஆன்சர் கீ, கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது.இந்நிலையில், தேர்வுக்கான முடிவுகளின், மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி