பட்ஜெட்- வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கப்படுமா?
புதுச்சேரி, : 'வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க வேண்டும்' என பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்தார். சட்டசபை கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:பி.ஆர்.சிவா: புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து இறந்தோர் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்குவதற்கான கோப்பு பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கின்றது. அவர்களுக்கு வேலை வழங்கப்படுமா.முதல்வர் ரங்கசாமி: பணியின்போது இறந்த அரசு ஊழியர்களது குடும்பங்கள் ரொம்ப கஷ்டமான சூழலில் இருக்கின்றனர். இறந்த வாரிசுதாரர்களின் 500 பேர் வரை உள்ளனர். எனவே, அவர்களை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது தொடர்பான ஒரு கொள்கை முடிவு விரைவில் அறிவிக்கப்படும். இது தொடர்பாக நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களை எம்.டி.எஸ்., எனப்படும் பல்நோக்கு ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.