உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்ஜெட்: ஊரக மேம்பாட்டுத் துறை 

பட்ஜெட்: ஊரக மேம்பாட்டுத் துறை 

பட்ஜெட்டில் ஊரக மேம்பாட்டு துறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:  * மத்திய அரசின் விக்சித் பாரத்– வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதிமொழி இயக்கம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு, தகுதியான குடும்பத்திற்கு ஆண்டுதோறும் 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலை வழங்கப்படும். ஊரக வளர்ச்சி வட்டாரங்களில் மொத்தம் 1124 பணிகள் அடையாளம் காணப்பட்டு, 20 லட்சம் வேலை நாட்கள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  * 108 கிராம பஞ்சாயத்துகளிலும் 100 சதவீதம் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத நிலையை அடையும் நோக்கில் , தனிநபர் இல்லக் கழிப்பறைகள், சமூக சுகாதார வளாகங்கள், திடக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.  * பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 67.02கோடி மதிப்பீட்டில் நவீன கட்டுமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 108 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் அனைத்து பருவ காலங்களிலும் தடையற்ற போக்குவரத்து வசதி உறுதி செய்யப்படுவதுடன், சாலைகளின் நீடித்த பயன்பாடும் மேம்படுத்தப்படும்.   * இதற்காக ஊரக மேம்பாட்டுத்துறைக்கு ரூ. 158.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை