உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயானக்கொள்ளை திருவிழா

மயானக்கொள்ளை திருவிழா

திருபுவனை : நல்லுார் மாயக்குறத்தி அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது.திருபுவனை அடுத்த நல்லுாரில் உள்ள மாயக்குறத்தி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா கடந்த 28ம் தேதி காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு எல்லை கட்டுதலும் நடந்தது.நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு அம்மன் குறக்கூடை எடுத்தலும், 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக ஆராதனை, மாலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. நேற்று மாலை 6:30 மணிக்கு நல்லுார் மதுரை வீரன் கோவில் வளாகத்தில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 7:30 மணிக்கு அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை அருள்பாண்டி தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை