உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு

திருபுவனை : திருபுவனை அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புதுச்சேரி, திருபுவனைபாளையம் பாரதிதாசன் வீதியை சேர்தவர் மனோகர் மகன் விக்னேஷ்குமார், 27; மன நலம் பாதித்தவர். தாய் வேணியின் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த 5ம் தேதி காலை 10:15 மணிக்கு விக்னேஷ்குமார் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகி ஆபத்தான நிலையில் அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை