உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வேனை விபத்தில் சிக்க வைத்த போதை பஸ் டிரைவர் மீது வழக்கு

வேனை விபத்தில் சிக்க வைத்த போதை பஸ் டிரைவர் மீது வழக்கு

பாகூர்: மகேந்திரா வேனை விபத்தில் சிக்க வைத்த, போதையில் தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விருதாச்சலம் வடக்கு வீரபாண்டியன் தெருவை சேர்ந்த காதர் மைதின் 45; டிரைவர். இவர் நேற்று (நவ.,22) மதியம் மேக்சி கேப் வேனை, புதுச்சேரி நோக்கி ஓட்டிச் சென்றார். நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் சென்ற போது, பின்னால் வந்த தனியார் பஸ், முந்தி செல்ல முயன்று வேனை இடது பக்கமாக அணைத்துள்ளார். இதனால், காதர் மைதின், பஸ், வேன் மீது மோதுவதை தவிற்க, இடது பக்கமாக சென்றார். அப்போது, கட்டுப்பாட்டை மீறி பாலத்தின் மின்விளக்கு கம்பத்தின் மீது வேன் மோதியது. இந்த விபத்தில், வேனின் இடது பக்க கண்ணாடி சேதமானது. அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்திற்கு காரணமான தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் மடுகரையை சேர்ந்த மணி 26; என்பதும், மதுபோதையில் இருப்பதும் தெரியவந்தது. புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார், மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ