உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.எஸ்.என்.எல்., ஓவியப்போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

பி.எஸ்.என்.எல்., ஓவியப்போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சார்பில் பள்ளி மாணவருக்கான ஓவியப்போட்டி வரும், 29,ம் தேதி நடக்க உள்ளதாக, பொது மேலாளர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 25வது தொடக்க ஆண்டை முன்னிட்டு, புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சார்பில், 1 முதல் 5,ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான, ஓவியப்போட்டி வரும், 29,ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, லாஸ்பேட்டை, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். 'பி.எஸ்.என்.எல்., அதிவேக இன்டர்நெட் உடன் இணைந்து கற்போம்.. இணைந்து முன்னேறுவோம்' எனும் தலைப்பில் போட்டி நடக்க உள்ளது. முன்பதிவிற்கு, 9486107981 என்ற எண்ணில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் தொடர்பு கொள்ளலாம். மேலும், வாடிக்கையாளர் விழிப்புணர்வு பேரணியை, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடத்த உள்ளனர்.இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான, பரிசளிப்பு விழா முதன்மை பொதுமேலாளர் தலைமையில் வரும் அக்., 3,ம் தேதி தலைமைதொலைபேசி நிலையத்தில் நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி