உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாய்க்கால் துார் வாரும் பணி

 வாய்க்கால் துார் வாரும் பணி

புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலியாக வாய்க்கால் துார் வாரும் பணி செய்யப்பட்டது. புதுச்சேரி, சாமிப்பிள்ளை தோட்டம் பகத்சிங் நகரில் வெள்ளவாரி வாய்க்கால் செல்கிறது. கழிவுநீர் மற்றும் மழை நீர் இந்த வாய்க்கால் வழியே செல்கிறது. பொதுமக்கள் பயன்படுத்தும், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் காலி பாட்டில்கள் என குப்பைகள் வாய்க்காலில் அடைந்திருந்தது. அதனால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று துர்நாற்றம் மற்றும் கொசுக்கள் பரவி குடியிருக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், தினமலர் நாளிதழில் புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதையடுத்து, பொதுப்பணித்துறையினர் ஜே.சி.பி., மூலம் துார் வாரும் பணியை நேற்று துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை