உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி ரோட்டரி கிளப் ஆப் பிரைடு மற்றம் விஷன், சென்னை அப்போலோ புரோட்டன் புற்றுநோய் மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அக்கார்டு ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு, பிரைடு திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், விஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சீனிவாசன் தலைமை தாங்கினர். இதில், அப்போலோ புரோட்டன் புற்றுநோய் மையத்தின் மூத்த ஆலோசகர், அறுவை சிகிச்சை நிபுணர் சுதீப்தா குமார் ஸ்வைன் கலந்து கொண்டு, 'ரோபோடிக் அறுவை சிகிச்சை: வயிற்று புற்றுநோய் சிகிச்சையில், துல்லியமும், நிம்மதியும்' தலைப்பில் புற்றுநோய் சிகிச்சையில்புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், ரோபோடிக் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். இதில், ரோட்டரி கிளப் ஆப் பிரைடு மற்றும் விஷன் நிர்வாகிகள் அனுாப், நவீன் பாலாஜி, அன்னையன், ரெஸ்மி, சிவஜோதி, ரூபா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி