உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வேட்பாளர் செலவு ரூ. 28 லட்சம் மட்டுமே

 வேட்பாளர் செலவு ரூ. 28 லட்சம் மட்டுமே

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வேட்பாளர் செலவு ரூ. 28 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, தேர்தல் துறை எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து, பறக்கும் படை மூலம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, நாட்கள் குறைவாக இருப்பதால், அரசியல் கட்சிகள் தொகுதி உடன்பாடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் ரூ. 28 லட்சம் மட்டும் செலவு செய்யதேர்தல் துறை அனுமதி அளித்துள்ளார். இதனை கண்காணிக்க தேர்தல் செலவின குழு அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை