உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்பனை 5 பேர் கைது

கஞ்சா விற்பனை 5 பேர் கைது

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை மூலகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் நகர், பம்ப் அவுஸ் அருகே நின்றிருந்த ஐந்து பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி, சோதனை செய்தனர். அவர்கள், பொது மக்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பதற்காக 2 கிலோ 600 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, கஞ்சா வைத்திருந்த உழவர்கரை பிரதீஷ் மகன் பிரபாகரன்,20; சென்னை வேளச்சேரி சுப்ரமணி மகன் கன்னியப்பன்,24; அருள்பதி மகன் நந்தகுமார்,25; பூமியான்பேட்டை தயாளன் மகன் ஹரிஹரன்,19; மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை கைது செய்து, கஞ்சா, ஒரு ஸ்கூட்டர், நான்கு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி