மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
07-Jul-2025
புதுச்சேரி : உப்பளம் எக்ஸ்போ மைதானம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஒதியஞ்சாலை சப் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். உப்பளம் எக்ஸ்போ மைதானம், எடை மேடை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவர், போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டி பிடித்து, போலீசார் விசாரித்தபோது, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், விழுப்புரம், ரயில் நிலையம் அருகே சேவியர் காலனியை சேர்ந்த ஜோசப் ராஜ் (எ) கக்கா, 34; என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து, போலீசார், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
07-Jul-2025