உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரை சேதப்படுத்தி பணம் திருட்டு

காரை சேதப்படுத்தி பணம் திருட்டு

அரியாங்குப்பம்: காரை சேதப்படுத்தி, பணம் மற்றும் டூல்ஸ் பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அரியாங்குப்பம், சப்தகிரி ட்ரீம் சிட்டியை சேர்ந்தவர், சரவணன், 41. இவர் பழைய கார்களை வாங்கி, விற்பனை செய்து வருகிறார். அரியாங்குப்பத்தில் உள்ள கடையை நேற்று காலை திறக்க சென்றார். கதவில் இருந்த வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டு, கடை உள்ளே நிறுத்தி வைத்திருந்த ஐ 20 மாடல் கார் சேதப்படுத்தப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கார் டூல்ஸ் பொருட்கள் திருடப்பட்டிருந்தது. புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, பணம் உள்ளிட்டவையை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !