மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ.,க்களின் வருமானம் பல மடங்கு அதிகரிப்பு
16-Jun-2025
புதுச்சேரி : புதுச்சேரி எம்.எல்.ஏ., வீட்டில் செயின் திருடு போனது குறித்து கார் டிரைவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். பா.ஜ., நியமன எம்.எல்.ஏ., இவரது தந்தை கலியபெருமாள், வீட்டின் முதல் மாடியில் வசிக்கிறார். அவருக்கு வீட்டின் உள்ள டிரைவர்கள், வேலைக்காரர்கள் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.கடந்த 6ம் தேதி கலியபெருமாள் அறையில் உள்ள பீரோ திறந்து கிடப்பதாக, கார் டிரைவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, குடும்பத்தினர் பீரோவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த 15 சவரன் தங்க செயின் திருடு போய் இருந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை சோதனை செய்ததில், புதிய நபர்கள் யாரும் வந்ததாக தெரியவில்லை.இதுகுறித்து வெங்கடேசன் எம்.எல்.ஏ.,வின் மகன் பாலாஜி பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, நகை திருடுபோனது எம்.எல்.ஏ., வீட்டில் பணிபுரிந்த 2 டிரைவர்கள் மற்றும் வேலைக்கார பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.
16-Jun-2025