உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருச்சி பகுதியைச் சேர்ந்தவர் சரத், 39; டிரைவர். இவர், விழுப்புரம் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி சரக்கு வேனை ஓட்டிச் சென்றார். நேற்று காலை 11:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த ஷேக்உசேன்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழுந்து வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சரத் சிறு காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. எடைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை