மேலும் செய்திகள்
பொங்கல் கலை நிகழ்ச்சி
17-Jan-2025
காரைக்கால்: காரைக்கால் கார்னிவல் விழாவையொட்டி, சாலையோர கலை நிகழ்ச்சிகள் நடந்தது.காரைக்கால் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை சார்பில், காரைக்கால் கார்னிவல் விழா நேற்று துவங்கி, வரும் 19ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. விழா முதல் நாளில் சாலையோர கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து பாரதியார் சாலை, திருநள்ளார் சாலை வழியாக உள்விளையாட்டு அரங்கம் வரை கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியை அமைச்சர் திருமுருகன் துவக்கி வைத்தார்.துணை கலெக்டர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பின், அமைச்சர் திருமுருகன். நாஜிம் எம்.எல்.ஏ., ஆகியோர் குதிரை வண்டியில் ஊர்வலம் வந்தனர். ஆதிவாசி வேடம், கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், வெளிமாநில கலைக்குழு மற்றும் பல்வேறு நடனக்குழுவினர் தங்கள் திறமைகளை கலை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்ய, சுற்றுலத்துறை அதிகாரி பரசுராமன், எஸ்.பி.,க்கள் சுப்ரமணியன், பாலச்சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Jan-2025