மேலும் செய்திகள்
தாயை தாக்கிய மகன் மீது வழக்கு
26-Sep-2026
விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் வாலிபரை தாக்கிய தச்சு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். ஆரோவில் அருகே கலைவாணர் நகரை சேர்ந்தவர் விஜய். இவர் கடந்த ஆக., 31ம் தேதி முன்விரோதம் காரணமாக நாவற்குளம் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், விஜய் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள, ஆகாஷ் மற்றும் அவரோடு ஒரு சிலர் எடுத்த புகைப்படம், கொலை செய்யப்பட்ட விஜயின் அண்ணன் வசந்த் மொபைல் போனுக்கு வந்துள்ளது. அதில், வசந்தின் மைத்துனரின் சகோதரர் மணிகண்டன்,28; என்பவரும் ஆகாேஷாடு சேர்ந்து எடுத்த போட்டோ இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த வசந்த், தனது தம்பி விஜய் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்பும், அதற்கு பின்னும் மணிகண்டன், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கும்பலோடு, மணிகண்டன் தொடர்பில் இருந்ததாக சந்தேகம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்து, மணிகண்டனை தாக்கினார். இது குறித்து மணிகண்டன் ஆரோவில் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வசந்த் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
26-Sep-2026