உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சக மாணவர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

சக மாணவர்களை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி; வேல்ராம்பட்டு தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., ஐ.டி., இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் விநாயகம், 19. இவருக்கும், அதே கல்லுாரியில் படிக்கும் சரண் உட்பட சில மாணவர்களுக்கு கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் தகராறு ஏற்பட்டது.இது தொடர்பாக, கல்லுாரி நிர்வாகம், தகராறில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து பேசியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், விநாயகம் தனது நண்பருடன், கல்லுாரி பைக் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார்.அங்கு வந்த, மாணவர்கள் சரண், விமல், ரமனேஷ், சித்தார்த் மற்றும் சில மாணவர்கள், விநாயகம் அவரது நண்பர், முகிலன் ஆகிய இருவரையும் தாக்கினர்.காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். புகாரின் பேரில், சரண் உட்பட 4 பேர் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை