உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெற்றோரை தாக்கிய மகன்கள் மீது வழக்கு

பெற்றோரை தாக்கிய மகன்கள் மீது வழக்கு

பாகூர் : பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அய்யாதுரை, 72. இவரது மகன்கள் சாந்தமூர்த்தி, 45; முருகன், 42; கூலி தொழிலாளிகள். இருவருக்கும் குடிப்பழக்கம் உள்ளது. இருவரின் மனைவிகளும் ஏற்கனவே பிரிந்து சென்று விட்டதால், தந்தையின் வீட்டின் அருகே தனித்தனியாக வசிக்கின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன், சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராரில், சாந்தமூர்த்தி, அவரது தம்பி முருகனை கத்தியால் வெட்டினார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சாந்தமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமினில் வந்தார்.நேற்று முன்தினம் காலை சகோதரர்கள் இருவரும் சேர்ந்து, அவர்களது பெற்றோரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அய்யாதுரை அளித்த புகாரின் பேரில், சாந்தமூர்த்தி, முருகன் மீது பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !