மேலும் செய்திகள்
போலீசாருக்கு மிரட்டல் நான்கு பேர் கைது
25-Sep-2025
பாகூர்,; கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவமனை அருகே ஒருவர் குடி போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில்'' கடலுார் அடுத்துள்ள ராமாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த மாணிக்கவேல் 32; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல், கன்னியக்கோவில் ஆஞ்சநேயர் கோவில் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட மனப்பட்டு பகுதியை சேர்ந்த அண்ணாமலை 23; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
25-Sep-2025