உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இடம் பிரச்னை 4 பேர் மீது வழக்கு

இடம் பிரச்னை 4 பேர் மீது வழக்கு

புதுச்சேரி : திப்புராயபேட்டையில் இடபிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம், ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன், 54. இவரது மாமனார் வீடு திப்புராயபேட்டை அந்தோனியார் கோவில் வீதியில் உள்ளது. அந்த இடம் பிரச்னை தொடர்பாக, பாண்டியனின் மனைவி இருதய மேரிக்கும், அவரது தம்பி தெசிர் இடையேயான வழக்குக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.கடந்த 24ம் தேதி பாண்டியன், இருதயமேரியுடன் திப்புராயப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த தெசிர், அவரது மனைவி தேவி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசில் பாண்டியன் அளித்த புகாரின் பேரில், தெசிர், தேவி ஆகியோர் மீதும், தெசிர் அளித்த புகாரின் பேரில், பாண்டியன், இருதயமேரி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை