உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பழைய கார் விற்பனையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி : தம்பதி மீது வழக்கு

பழைய கார் விற்பனையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி : தம்பதி மீது வழக்கு

புதுச்சேரி: பழைய கார் விற்பனையாளரிடம் ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, புதுசாரம், லட்சுமி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 52; ஆப்பிள் பிரிமியம் கார்ஸ் என்ற பெயரில் பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம், நித்தேஷ் கார்ஸ் உரிமையாளரான பட்டானுார், மாட்டுக் காரன் சாவடியை சேர்ந்த சித்தானந்தம் (எ) முரளி, 36; கார்களை விற்பனை செய்யவும், வாங்கவும், 2015ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம், இருவரும் தலா ரூ.5 லட்சம் போட்டு, ரூ.10 லட்சத்திற்கு பழைய ஆடி ஏ6 காரை வாங்கியுள்ளனர். அந்த காரை, சித்தானந்தம், அவரது மனைவி சாமுண்டீஸ்வரி இருவரும் சேர்ந்து, கிருஷ்ணமூர்த்தி தெரியாமல் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் கருணாமூர்த்தி என்பவரிடம், 2022ம் ஆண்டு ரூ. 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், கார் வாங்குவதற்கு கிருஷ்ணமூர்த்தி அளித்த முதலீடு தொகை ரூ.5 லட்சத்தை தருவதாக கூறியும், தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி டி நகர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சித்தானந்தம், அவரது மனைவி சாமுண்டீஸ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை