உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தகராறில் இருவரை தாக்கிய தந்தை, மகன்கள் மீது வழக்கு

தகராறில் இருவரை தாக்கிய தந்தை, மகன்கள் மீது வழக்கு

புதுச்சேரி,: தகராறில் இருவரை தாக்கிய தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 44; மீனவர். இவரது மகள் ரத்திகா, பெற்றோர் எதிர்ப்பை மீறி அதே பகுதியை சேர்ந்த நீலமேகம் மகன் தேசிங்குராஜா என்பவரை கடந்த 17ம் தேதி காதல் திருமணம் செய்தார். தேசிங்குராஜா, ரித்திகாவை கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாக ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீசார் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினர்.தேசிங்குராஜா மீது புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த நீலமேகம் மற்றும் அவரது மகன்கள் நித்திஷ், நிர்மல் ஆகியோர், ரவிச்சந்திரன், அவரது மகன் ராகுல் ஆகியோரை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.நீலமேகம் உள்ளிட்ட 3 பேர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ