உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் மீது வழக்கு

குட்கா விற்றவர் மீது வழக்கு

புதுச்சேரி: பள்ளி அருகில் குட்கா விற்றவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். முத்தியால்பேட்டை போலீஸ் சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் அருள்குமார், ஏட்டு நாகராஜன் மற்றும் போலீசார் பள்ளிக்கூடம் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, ஆய்வு செய்தனர். அப்போது சோலை நகர் பகுதியில் உள்ள காயத்திரி, 27, என்பவரது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின் கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி