உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மனைவிக்கு கத்தி குத்து கணவர் மீது வழக்கு

 மனைவிக்கு கத்தி குத்து கணவர் மீது வழக்கு

புதுச்சேரி: குடும்ப செலவிற்கு பணம் கேட்ட மனைவியை, கத்தியால் குத்திய கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ், பிரியாணி கடை நடத்தி வருகிறார். குடும்ப செலவிற்கு ஏன் பணம் தரவில்லை என இவரது மனைவி கல்பனா (எ) ராணி, 38; கடந்த 2ம் தேதி, கணவரிடம் கேட்டார். ஆத்திரமடைந்த, அவர், நீ ஒழிந்தால் தான் நிம்மதி என, சமையல் அறையில் இருந்த கத்தியால் மனைவியின் வயிற்றில் குத்தினார். அதில், பலத்த காயமடைந்த கல்பனா, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தார். நேற்று முன்தினம், வீட்டுக்கு வந்த, ஜெய்கணேஷ், இன்னுமா நீ சாகவில்லை என கேட்டு, கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார், ஜெய்கணேஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ