உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணிடம் நகை, பணம் ஏமாற்றியவர் மீது வழக்கு

பெண்ணிடம் நகை, பணம் ஏமாற்றியவர் மீது வழக்கு

புதுச்சேரி: பெண்ணிடம் நகை, பணத்தை பெற்று கொண்டு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையம், புவன்கரே வீதியை சேர்ந்தவர் நித்யா, 39; மார்க்கெட்டிங் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்ட். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது மகள் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார்.கடந்த 2024 ஆண்டு ஜூலை மாதம் வேல்ராம்பட்டை சேர்ந்த அஜித் என்பவர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது தொடர்பாக நித்யாவிடம் பேசியுள்ளார். நித்யாவிடம் இன்சூரன்ஸ் போடுவதாக கூறி தொடர்ந்து பேசி பழகியுள்ளார்.இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் அஜித், தொழில் துவங்குவதற்காக தனது தந்தை அளித்த 20 லட்சம் ரூபாயை செலவழித்து விட்டதாகவும், அதனை தந்தையிடம் கூறினால், அவர் தற்கொலை செய்து கொள்வார். ஆகையால், அந்த பணத்தை ஈடு செய்யும் வகையில், நித்யாவிடம் பணம் மற்றும் நகை இருந்தால் தரும்படி கேட்டுள்ளார்.இதை நம்பிய நித்யா பல்வேறு தவணைகளாக அஜித்திடம் ஐந்தரை சவரன் நகை மற்றும் ரூ.47 ஆயிரத்து 500 பணம் கொடுத்துள்ளார். நகை மற்றும் பணத்தை நித்யா திரும்ப கேட்டபோது, அஜித் அவரை, திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.நித்யா அளித்த புகாரின் பேரில் அஜித் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை