உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் அமைச்சரின் கணவருக்கு மிரட்டல் என்.ஆர்.காங்., நிர்வாகி மீது வழக்கு

முன்னாள் அமைச்சரின் கணவருக்கு மிரட்டல் என்.ஆர்.காங்., நிர்வாகி மீது வழக்கு

புதுச்சேரி : முன்னாள் அமைச்சரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த, என்.ஆர்.காங்., நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா. இவரது கணவர் சண்முகம். இவர், கருவடிக்குப்பத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த சந்தனராஜ் என்பவரின் மொபைல் வாட்ஸ் ஆப்பில் இருந்து 2 வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது. அதில், ஒரு நபர், சண்முகத்தை அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். மிரட்டல் விடுத்த நபர், ஈஸ்வர்ராஜ் என்பது தெரியவந்தது. இவர், என்.ஆர்., காங்., இளைஞரணி நிர்வாகியாக இருப்பதும், முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவின் உறவினர் என, தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சண்முகம் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை