மேலும் செய்திகள்
பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
18-Jan-2025
புதுச்சேரி : புஸ்சி வீதியில் அனுமதியின்றி பேனர் வைத்திருந்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரியில் அனுமதி யின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட நிர்வாகம், நகராட்சிகள் கடுமையாக எச்சரித்து வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் புஸ்சி வீதி சாலையில், மகாத்மா காந்தி வீதி முதல் அண்ணா சிலை வரை டிஜிட்டல் பேனர்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் அனுமதியின்றி சட்ட விரோதமாக டிஜிட்டல் பேனர் வைத்த புதுச்சேரி, தென்னாஞ்சாலை ரோட்டை சேர்ந்த பாலா என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Jan-2025