உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபர் மீது வழக்கு

வாலிபர் மீது வழக்கு

புதுச்சேரி: நடிகர் அஜித் படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ராஜிவ் சிக்னல் அருகே உள்ள தியேட்டரில், நேற்று முன்தினம் படம் பார்த்து விட்டு இரவு 9:00 மணியவில், வெளியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, இரவு காட்சியை பார்க்க வாலிபர் ஒருவர் மதில் சுவர் ஏறினார். தியேட்டர் ஊழியர்கள் அவரை பிடித்து, கேட்ட போது, ஆத்திரமடைந்த அந்த நபர், ரகளை செய்து, தியேட்டர் பொருட்களை சேதப்படுத்தினார். டி நகர் போலீசார், அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், கோவிந்தசாலையை சேர்ந்த பிரகாஷ், 23, என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை