மேலும் செய்திகள்
கள்ளச்சாராய வியாபாரி மணல் கடத்தலில் கைது
26-Jan-2025
புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு சங்கரா பரணி ஆற்றங்கரையோரம் அனுமதியின்றி மணல் திருடப்பட்டு வருவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கூனிச்சம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள காலி மனைப்பிரிவு அருகே மறைவான இடத்தில் மணல் குவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து சங்கராபரணி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணலை திருடி பதுக்கியதாக, கூனிச்சம்பட்டை சேர்ந்த சுரேஷ், 30, மதன்குமார் 32, அருள் 26; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Jan-2025